#கோவை || நிலஅபகரிப்பு? அடியாட்களுடன் வந்து தாக்குதல் நடத்தும் கும்பல்., வெளியான அதிர்ச்சி காணொளி.!
kovai land issue cctv video
கோவை அருகே நிலத்தகராறில் தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டம், கணபதி அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மோட்டார் பம்ப் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கார்த்திகேயனுக்கு இடையே நில தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன், செல்வபுரத்தில் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு கார்த்திகேயனுக்கு சொந்தமான இடத்தில் நிறுவனம் ஒன்றை நிறுவ முயற்சி செய்துள்ளார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் பாலகிருஷ்ணனும், ராமச்சந்திரனும் அடியாட்களை அழைத்து வந்து, கார்த்திகேயனின் நிலத்தில் நிறுவனம் நடத்துவதற்காக பொருட்களை கொண்டு வந்து இறங்கியுள்ளனர். அப்போது கார்த்திகேயன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ராமச்சந்திரன் மற்றும் அவரை சேர்ந்த அடியாட்களும் சேர்ந்து இரும்புராடுகளை எடுத்து, தனியாக வந்த கார்த்திகேயன் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
kovai land issue cctv video