திமுகவில் இணைவதும் தப்பில்லை..!! திமுகவில் இணைய நூல் விடும் கோவை செல்வராஜ்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதேசமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் கூறியிருந்தார். இந்த கருத்தால் கோவை செல்வராஜ் விரைவில் திமுகவில் இணைவார் என பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கோவை செல்வராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "என்னோட 50 வருட அனுபவத்தில் எனக்கு எல்லா கட்சியோட வரலாறும் தெரியும். இனி இவர்களோடு சேர்ந்து பயணித்தால் கேவலம் தான். எனவே அதிமுக வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். நல்லா பழகிட்டு பிடிக்கலைன்னா ஒதுங்குறது தான் புத்திசாலித்தனம். 

திமுக வெறுக்க கூடிய கட்சி இல்லை. முதல்வர் ஸ்டாலின் நன்றாக செயல்படுகிறார். எம்ஜிஆர் முதலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தார். பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். தற்பொழுது எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாவின் நூறாவது ஆண்டு விழா நடைபெறுகிறது. இதுவரை ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் அதற்காக விழா எடுக்கவில்லை.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் அந்த அம்மாவிற்காக விழா எடுத்துள்ளார். திமுகவில் மட்டும் தான் இன்றைக்கும் திராவிட பாரம்பரியம் உள்ளது. அதனால் திமுகவில் இணைவது தப்பில்லை. என்னோட நண்பர்களுடன் கலந்து பேசி எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்ற பார்த்துவிட்டு முடிவெடுப்பேன்" என அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூடிய விரைவில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவே தெரியவந்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து கோவை செல்வராஜ் தன்னை திமுகவில் இணைத்துக் கொள்வார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Selvaraj sensational interview to join DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->