தொடர் தோல்வியின் முகமாக கிருஷ்ணசாமி ! தென்காசி தொகுதியில் 7-வது முறையாக தோல்வி!! - Seithipunal
Seithipunal


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 7வது முறையாக தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து 7வது முறையாக தோல்வியை அடைந்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்தியாவில் கடந்த வியாக்கள் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நிறைவு பெற்றது. ஏழு கட்டங்களாக தேர்தலில் நடத்தி முடித்த ஹிந்தியில் தேர்தல் ஆணையம் உலக அளவில் சாதனை படைத்தது. ஆந்திர பிரதேசம் ஒடிசா போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடைபெற்ற 18 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று வாக்கு என்ன மையங்களில் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தலைமையில தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் நான்கு முனை போட்டி நிலவியது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. அதிமுக கூட்டணி இடம் பெற்ற புதிய தமிழகம் கட்சி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி 7வது முறையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணசாமி 1998,1999,2004,2009,2014,2019 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தோல்வியை சந்தித்தார். இருந்தபோதிலும் 7வது  முறையாக போட்டியிட்ட கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் இரண்டாவது இடத்தை பிடித்து வந்தார். இந்த தேர்தலிலும் கிருஷ்ணசாமி 7வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnasamy Defeated for the 7th time in Tenkasi Constituency


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->