கே.எஸ்.அழகிரி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி.! - Seithipunal
Seithipunal


மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்ற கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டு மக்களிடையே அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை தந்த இயேசு கிறிஸ்துவின் வழியில் பயணிக்கும் கிறிஸ்துவ பெருமக்கள், அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருவதாகவும், ஏழை எளிய மக்கள் மீது மிகுந்த சேவை மனப்பான்மையோடு அன்பு காட்டுவதில் கிறிஸ்துவ மதம் அளப்பறிய பங்காற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என பல அளப்பரிய பணிகள் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு பாதுகாவலாக கிறிஸ்துவ மதம் விளங்குகிறது என்றும் ஆனால் இன்றைய பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிறுபாண்மை மக்களின் உதிமைகள் பறிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் கிறிஸ்துவர்களின் சமூகப் பணியை முடக்குவதற்கு பாஜக அரசு தீவிர தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதனை மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோர் வழியில் வந்த மதச்சார்பற்ற சக்திகள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்ற கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KS Alagiri wish Christmas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->