மேலும் ஒரு வருடம் தடையை நீட்டித்து, தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தலுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் இளைஞர்கள் பயன்படுத்தி வந்தனர். 

இதற்க்கு முக்கிய கரணம் திரைபிரபலங்கள் இந்த குட்கா பொருட்கள் விளம்பரங்களில் நடிப்பது, குறைந்த விலையில் இது கிடைப்பது என்று தெரிய வந்தது. 

குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது.

இதனையடுத்து குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்தது.
 
இந்த தடை கடந்த 23-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த தடையை மேலும் ஒராண்டுக்கு நீடித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. 

மேலும், குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், பாதுகாக்கவும் மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kutka ban in tn one more year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->