மூலபத்திரம் எங்கே? விடுவதாக இல்லை., மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சவால் விட்டு பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது எல் முருகன் அளித்த பதில்,

"திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாத காலம் என்பது கருத்து சொல்ல முடியாத காலமாக இருந்தது (ஹனிமூன் ப்ரியர்ட்). ஆனால் இந்த காலம் முடிந்த பிறகுதான் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்து உள்ளார்கள்.

எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் என்று பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து செய்வதற்கு தயாராக திமுகவினர் உள்ளனர். ஏனென்றால் திமுகவினரின்., திமுகவை சார்ந்தவர்களுக்கு., மற்றவர்களை தாக்குவதில் நிகர் தாக்கியதில் அவர்களுக்கு நிகர் அவர்தான். கருத்து சுதந்திரம் மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் நிறைய நடக்கப்போகிறது. அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

முரசொலி மூலபத்திரம் சம்பந்தமாக வழக்குகள் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதை நான் ஊடக சகோதரர்கள் மூலமாக அறிவித்துக் கொள்கிறேன். 

அதாவது முரசொலி மூல பத்திரத்தை காட்டுங்கள் என்று கேள்வி கேட்பதற்காக என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் அதை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறேன். என்னுடைய சொந்தங்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக என் மேல் எத்தனை வழக்கு பாய்ந்தாலும் அதை நான் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறேன்" என்று எல் முருகன் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

l murugan say about murasoli moolapathiram dmk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->