நாம் தமிழரை தாக்கிய திமுகவினருக்கு மத்திய அமைச்சர் கண்டனம்.! இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவால்.!
L MURUGAN SAY ABOUT NTK MEMBER ATTCKED
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதில், நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் மேடையின் மீது ஏறி திமுக வினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எல் முருகன்,
"திமுகவினருக்கு இது ஒரு வாடிக்கையான செயல். இதை இவர்கள் செய்யவில்லை என்றால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். திமுகவினர் உடைய ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று தான், கருத்து சுதந்திரத்தை பலிகொடுப்பது. கருத்து சுதந்திரத்தை அவமதிப்பது. ஒருவர் கருத்து சொல்கிறார் என்றால் அவர்களை கைது செய்வது.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த, அவர்களுடைய சார்பு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சொல்லும் போது., அதைப்பற்றி இந்த அரசாங்கம், அந்த சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
மாற்றுக் கட்சியினர் ஒரு கருத்தைச் சொல்லும் போது, அவர்களைத் தாக்குவது, அவர்களை கைது செய்வது என்பது தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக தான் பார்க்கிறேன்" என்று எல் முருகன் பதிலளித்தார்.
English Summary
L MURUGAN SAY ABOUT NTK MEMBER ATTCKED