ரப்பர் ஸ்டாம்ப் முதலமைச்சராக ஸ்டாலின் - கலாய்த்து தள்ளிய மத்திய அமைச்சர்!
L Murugan Say About Rubber stamp Cm stalin
திமுகவினரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அககட்சியின் தலைவர் இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மு க ஸ்டாலின், மழை பெய்தாலும் என்னை தான் திட்டுகிறார்கள், மழை பெய்யவில்லை என்றாலும் என்னை தான் திட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்தவுடன், இன்று கட்சிக்காரர்கள் என்ன பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே எழுந்திருக்க வேண்டியதாக இருக்கிறது.
சில நேரங்களில் எனக்கு தூக்கமே கிடையாது. என் உடம்பை பாருங்கள்" என்று தனது மனக்குமுறலை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவிக்கையில், "தமிழகத்தில் காட்டாச்சி நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருடைய அமைச்சர்களை, கட்சி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
தன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத நிலையில் தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கிறார்" என்று எல் முருகன் தெரிவித்துள்ளார்
English Summary
L Murugan Say About Rubber stamp Cm stalin