நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிக்கள் போராட்டம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவையில், மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, "ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா" நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் குறித்த இரண்டு நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அப்போது, அவர் அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி பாஜக எம்.பி.க்கள் கையில் பதாகைகளை ஏந்தியடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp protest in parliment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->