தமிழ்க் குடிதாங்கி! சமூகநீதிக் காவலர்! எங்கள் ஐயா மருத்துவர் இராமதாஸ் - சீமான் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் அய்யா டாக்டர் திரு. மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு, மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநீதிக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் ஓயாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தங்களின் சமூகப் பணிகள் தொடர்ந்து செழித்திருக்கவும், நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்திடவும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்!

பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர்!
சமூகநீதிக் காவலர்!
தமிழ்க் குடிதாங்கி!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்!
எங்கள் ஐயா!
மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், உள்ள நிறைவுடனும் நலமோடு வாழ்ந்து தமிழினத்தின் உரிமைகள் வென்றிட பெருந்துணை புரிந்திட விழைகிறேன்!

இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan Seeman Wish Dr Ramadoss Birthday


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->