நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு தாக்கல்.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி (நேற்று) வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் நேற்று வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். 

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு 12,171 பேரும், பேரூராட்சிக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 1696 ஆண்கள், 1847 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 3456 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாள் மட்டும் 2112 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local body election 3456 nomination for chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->