தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல்.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!!
local body election in tamilnadu
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு என 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 510 பதவியிடங்களில், 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் பெற கடைசி நாள் 27 ஆம் தேதி மாலை 5 மணியாகும். வேட்பு மனு பரிசீலனை 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 30ஆம் தேதி மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
local body election in tamilnadu