கபடி வீரர்களின் உடைகளில் அரசியல் அடையாளம், சாதியை ரீதியான அடையாளங்களுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை! - Seithipunal
Seithipunal



இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

அபோபோது நீதிபதிகள் கபடி போட்டிகள் நடத்த அனுமதி வழங்கியதுடன், கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. 

அதன் விவரம் பின்வருமாறு :

* கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவ குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும்.

* கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்களோ, தலைவர்களின் படங்களோ, சாதியை ரீதியான அடையாளங்களோ இருக்கக் கூடாது.

* போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதிகள் சார்ந்த புகைப்படங்களோ, ஃப்ளக்ஸ் பேனர்களோ இருக்க கூடாது. 

* அரசியல் மற்றும் சாதி ரீதியான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது.

* கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டும்.

* அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும்.

* விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.

மேலும், போட்டியில் பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை பொருட்களோ, மதுவோ அறிந்திருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local TN Kabbadi game new rule announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->