நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை.!
LocalbodyElection 2022
தமிழகத்தில் 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால், இதுவரை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இந்த வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்படுகிறது.