BREAKING | ஜோதிமணி,மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் போது மக்களவை உறுப்பினர்கள் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்று பிற்பகல் 3 மணி வரை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவிக்கையில், "மக்களவை உறுப்பினர்கள் பதாகைகளுடன் வருவதை நிறுத்த வேண்டும். பதாகைகளுடன் வரும் மக்களவை உறுப்பினர்கள்  பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள்.

பாராளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பது மக்களவை உறுப்பினர்களின் கடமையாகும். இது ஜனநாயகத்தின் கோயில். பதாவைகளுடன் வரும் மக்களவை உறுப்பினர்கள், கூட்டத்தொடர் முடிந்த பிறகு பாராளுமன்றத்திற்கு வெளியே சென்று காட்டுங்கள்." என்று காட்டமாக அறிவுறுத்தினார். 

பின்னர் மீண்டும் தொடங்கிய மக்களவை கூட்டத்தில், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 பேரை நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Speaker Om Birla action ON Manikam Tagore Jyotimani suspended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->