மக்களவையில் 'ஜெய் சம்விதான்' .. எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்.. என்ன காரணம் தெரியுமா..?! - Seithipunal
Seithipunal



மக்களவையில் நேற்று எதிர்க் கட்சியினர் 'ஜெய் சம்விதான்' என்று கோஷமிட்டனர். இதற்கு சபையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 

மக்களவையில் கேரள காங்கிரஸ் எம். பி. சசி தரூர் பதவி ஏற்ற போது, பதவி ஏற்பதற்கான உறுதிமொழியை அவர் வாசித்து முடித்தவுடன் இறுதியாக ஜெய் ஹிந்த், ஜெய் சம்விதான் என்று கோஷங்களை முழங்கினார். 

இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சி எம். பி.க்கள் பலரும் 'ஜெய் சம்விதான்' என்று கோஷமிட்டனர். பதவியேற்ற பின்னர் சசி தரூர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வாழ்த்து பெற்று திரும்பிய போது தான் எதிர்க் கட்சி எம். பி. க்கள் ஜெய் சம்விதான் என்று கோஷமிட்டனர். 

இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க் கட்சி எம். பி. க்களை பார்த்து அவர் ஏற்கனவே அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க் கட்சி எம். பி. க்கள், ஜெய் சம்விதான் கோஷமிடுவதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். 

இதனால் கோபமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா 'அவையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது. எனக்கு அறிவுரை கூறாமல் உங்கள் இருக்கையில் அமருங்கள்' என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில் ஜெய் சம்விதான் கோஷத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எதிர்க் கட்சிகளின் குரலை அடக்குவது போன்றது என்று இந்தியா கூட்டணியினர் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Speaker Om Birla Opposed to Jai Samvidhan Slogan in Parliament


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->