திமுகவுக்கு இத்தனை கோடிகளா? தேர்தல் நிதியை வாரி வழங்கிய லாட்டரி மார்ட்டின்.!! - Seithipunal
Seithipunal


பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் நிதி பத்திரம் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சட்டையை கிளப்பியுள்ள நிலையில் கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் என்பவர் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிகப்படியான நிதி கொடுத்தது தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் நிதி பத்திரங்களின்‌ வாயிலாக தெரியவந்தது.

அதில் பாஜகவுக்கு அதிகப்படியான நிதியை லாட்டரி வழங்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில்  பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தற்போது மாநில கட்சிகளில் திமுகவுக்கு லாட்டரி மாட்டின் சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. 

நிதியாண்டு வாரியாக திமுக‌ பெற்ற நிதி : 

1) கடந்த 2020-2021 நிதியாண்டில் ஃபியூச்சர் கேம்மிங் அன்ட் ஹோட்டல் சர்வீசிங் நிறுவனம் மூலம் ரூ.60 கோடியும், மேகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மூலம் ரூ.20‌ கோடியும் என‌ மொத்தமாக ரூ.80‌ கோடியை‌ திமுக நிதியாக பெற்றுள்ளது.

2) கடந்த 2021-2022 நிதியாண்டில் ஃபியூச்சர் கேம்மிங் அன்ட் ஹோட்டல் சர்வீசிங் நிறுவனம் மூலம் ரூ.249 கோடியும், மேகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மூலம் ரூ.40 கோடி ரூபாயும், சன் நெட்வொர்க் நிறுவனம் மூலம் ரூ.10 கோடி ரூபாயும், இண்டியா சிமெண்ட் நிறு நிறுவனம் மூலம் ரூ.4 கோடியும், திருவேணி என்ற தனி நபர் மூலம் ரூ.3 கோடியும் என மொத்தமாக ரூ.306 கோடியை தேர்தல் நிதி பத்திரம் மூலம் பெற்றுள்ளது திமுக. 

3) கடந்த 2022-2023 நிதியாண்டில் ஃபியூச்சர் கேம்மிங் அன்ட் ஹோட்டல் சர்வீசிங் நிறுவனம் மூலம் ரூ.160 கோடியும், மேகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மூலம் ரூ.25 கோடியும் என மொத்தமாக ரூ.185 கோடியை தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது திமுக.

4) நடப்பு‌ நிதியாண்டில் கடந்த 2023ம் ஆண்டு‌ மார்ச் 1ம் தேதி வரை ஃபியூச்சர் கேம்மிங் அன்ட் ஹோட்டல் சர்வீசிங் நிறுவனம் மூலம் ரூ.40 கோடியை‌ தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது திமுக. மொத்தத்தில் ரூ.601 கோடியை தேர்தல் நிதி பத்திரம் மூலம் திமுக நன்கொடையாக பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lottery Martin gave 500Crs ElectoralBond to DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->