#சென்னை | 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை. சிக்கினான் மாடம்பாக்கம் அரசியல்வாதி.! - Seithipunal
Seithipunal


தாம்பரம் : சேலையூரில் கஞ்சா வியாபாரிகள் இருவரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது, அந்த வீட்டில் 17 வயதான சிறுமி ஒருவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியை மீட்டு குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், அந்த சிறுமி சித்தரவதை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, "எனது தந்தை ஓடிவிட்டார், தாய் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், மடிப்பாக்கம் அரசியல்வாதி ஒருவரது வீட்டுக்கு உதவி கேட்டு சென்றேன். 

அங்கயே என்னை தங்கவைத்து வீட்டு வேலை செய்ய வைத்தார். பின்னர், விசுவநாதன் என்பவர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினார்கள்.

அங்கு எனக்கு பாலியல் சித்ரவதை தொடங்கியது. அவரும், அவரின் நண்பர்களும் சேர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து சித்தரவதை செய்தனர்.

பின்னர், அந்த அரசியல்வாதியிடம் இருந்து என்னை ரூ.10 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பதாக கூறினார்" என்று சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், மாடம்பாக்கம் விசுவநாதன், கீர்த்திராஜன், பள்ளிக்கரணை ஹரிபிரசாத், திருவண்ணாமலை பாரதி, பள்ளிக்கரணை யுவராஜ், கீரப்பாக்கம் ஜி, பெருங்குடி நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madampakkam child abuse case arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->