#JustIn : ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம்.! ஆனால்..?  - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி 51 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் அனுமதி கேட்டு தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது அவர்கள் பரிசீலனை செய்யாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தை நாடினர்.

உயர்நீதிமன்றம் சில விதிமுறைகளை வழங்கி பேரணி நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. தற்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன.

சட்ட ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக காவல்துறை பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி  எந்த இடத்திலும் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. இதனால் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது அக்டோபர் 2ம் தேதிக்கு பதிலாக வருகின்ற நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madras high court allowed RSS mega rally


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->