அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை.!!
Madrashc interm stay on case against minister periyakarupan
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுக அதிமுகவினரிடையே நடந்த மோதல் தொடர்பாக தற்போதைய திமுக அமைச்சர் பெரியகருப்பன் உட்பட 8 திமுகவினர் பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் பெரிய கருப்பன் இல்லை எனவும், அந்த சம்பவத்துக்கு தொடர்பு இல்லை என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கங்களை விசாரிக்க சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Madrashc interm stay on case against minister periyakarupan