தேர்தல் ஆணையத்திற்கு "ஒரு வாரம் கெடு".. வைகோ தொடந்த வழக்கில் அதிரடி.!!
Madrashc order to ECI response on MDMK symbol case
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் சார்பில் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையகத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அந்த மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுகவிற்கு பம்பரம் சின்ன ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கூறி நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது.
மதிமுக சார்பில் பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தது.
English Summary
Madrashc order to ECI response on MDMK symbol case