ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ பதவிக்கு ஆப்பு.!! தேர்தல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
MadrasHC ordered file reply petition in election case against EVKS Elangovan
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகனின் தந்தை ஈ.வி.வி.கே.எஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து அந்த தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் விஜயகுமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்ததில் பல்வேறு விதிமீறல்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோன்று ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் சுரேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி இந்திய தேர்தல் ஆணையம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
English Summary
MadrasHC ordered file reply petition in election case against EVKS Elangovan