திமுக நிர்வாகியை விரட்டி சென்று விரட்டிய அதிமுக நிர்வாகி.! வெளியான சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


மதுரை திருப்பரங்குன்றம் அருகே திமுக நிர்வாகியை கொலை செய்வதற்காக, அதிமுக நிர்வாகி விரட்டி சென்ற சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் அவனியாபுரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமாருக்கும், அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அய்யனாருக்கும் இடையே, சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சரத்குமாரை அய்யனார் கத்தியால் குத்த முயன்றபோது அவர் தப்பி ஓடியுள்ளார்.

விரட்டிச் சென்று அய்யனார் சரத்குமாரின் வயிற்றில் கத்தியால் வெட்டியுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திமுக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai admk member attempt murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->