உதயநிதி பாணியில் கையில் செங்கல் தூக்கிய பாஜக அண்ணாமலை..!
Madurai AIMS hospital open in 2026 March
வரும் 2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 ஆண்டுகால சாதனைகளை விளக்க நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 150 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள். அவர்களுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர் செங்கல் ஒன்றை கையில் தூங்கி காண்பித்து மதுரையில் இருக்கிற வேளாண் பல்கலைக்கழகம் தற்போது எனது கையில் உள்ளது என தெரிவித்துள்ளார். நீங்கள் எதுவும் செய்ய மாட்டீங்க, செய்கிறவர்களையும் விட மாட்டீங்க, கொடுக்கணும் நினைச்சாலும் பாராட்ட மாட்டீங்க என தெரிவித்துள்ளார்.
English Summary
Madurai AIMS hospital open in 2026 March