#BREAKING : மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கம் - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தை தெரிவித்தார். 

பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நான் இங்கு வந்தேன். எனக்கு வெறுப்பு, மத அரசியல் ஒத்துவரவில்லை என என் மனதில் உள்ளதை அமைச்சரிடம் கொட்டிவிட்டேன். பாஜகவில் நான் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதுமில்லை. காலை இன்றுகாலை ராஜினாமா கடிதத்தை எழுதிவிடுவேன் என்று தெரிவித்திருந்தார். தமிழக அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட இந்த அடுத்தடுத்து திருப்பங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதுடன் கட்சிக்கு விளைவிக்கும் வகையில் சரவணன் நடந்து கொண்டதாகவும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சரவணனை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai district BJP president Saravanan removed from party Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->