ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க.. மதுரையை கலக்கிய அமைச்சர் மகன் திருமணம்.! பிரம்மிக்க வைத்த விபரங்கள்.!
Madurai Minister P Moorthy son Marriage
பொதுவாக வட மாநிலங்களில் தான் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் தங்கள் மகள் மற்றும் மகன் திருமணத்தை கோடிகளை கொட்டி பிரம்மாண்டமாக நடத்துவார்கள். தற்போது அவர்களுக்கு போட்டியாக திமுக அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் திருமணம் மதுரையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பி.மூர்த்தி இருக்கின்றார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். கடந்த 2021 தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மதுரை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கின்றார்.
தற்போது மூர்த்தி தனது மகன் திருமணத்தை மு க ஸ்டாலின் தலைமையில் நடத்தியுள்ளார். இந்த விழா மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. பாண்டி கோயில் இருக்கும் மைதானத்தில் மாநாடு போல இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு பந்தல் போடப்பட்டது.
ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் சாப்பிடும் வகையில் பந்தி அமைக்கப்பட்டது. அதிலும், சைவம், அசைவம் என்று தனித்தனி பந்தல்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தனி பந்தல்கள். தனியார் நிறுவனம் ஒன்றுதான் இது குறித்த ஏற்பாடுகளை செய்துள்ளது. அத்துடன் மொய் பணத்தை என்ன 50 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைடெக் முறையில் லேப்டாப்புகள் வைக்கப்பட்டு இந்த மொய் பணம் வசூலிக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்களை வியக்க வைக்கும் அளவிற்கு உணவு பரிமாறப்பட்டது. இந்த விருந்துக்காக 2000 ஆடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 750 சமையல் கலைஞர்களை பயன்படுத்தி ஐயாயிரம் கோடி செலவில் சாப்பாடு தயார் செய்யப்பட்டது.
இந்த திருமணத்திற்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள்,,
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மு க ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுத்த நிலையில் மணமகன் தியானேஷ் மணமகளுக்கு தாலி கட்டினார். இந்த பிரம்மாண்ட திருமணம் தற்போது தமிழக அளவில் பேசப்பட்டு வருகிறது.
English Summary
Madurai Minister P Moorthy son Marriage