திமுகவை கொந்திலிக்க வைத்த சு. வெங்கடேசனின் டிவிட்! 4 மணிநேரத்தில் நடந்த அதிசியம்! - Seithipunal
Seithipunal


கடந்த 19ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. 

குறிப்பாக அண்மையில் கோவையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள காடாக மாறின.

அதேபோல மதுரை மாநகராட்சி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக செல்லூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 

இந்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், நிர்வாகத்தின் கவனக்குறைவாளும், முன்னெச்சரிக்கை இன்மையாலும் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளதை ஏற்க முடியாது" என்று டிவிட் ஒன்றை நேற்று இரவு போட்டிருந்தார். 

மேலும் அவரின் அந்த பதிவில், "அதீத மழை மற்றும் எதிர்பாராத வெள்ள நீரால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நிர்வாகத்தின் கவனக் குறைவாலும்,   முன்னெச்சரிக்கை இன்மையாலும் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்து, திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ராமச்சந்திரனை டேக்ஸ் செய்து பதிவிட்டிருந்தார்.

சு. வெங்கடேசனின் இந்த பதிவு திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர், கூட்டணி கட்சி எம்பி திமுகவை கடுமையாக விமர்சித்து உள்ளதாக பகிர தொடங்கி இருந்தனர். 

ஆனால், அடுத்த நான்கு மணி நேரத்தில் சு.வெங்கடேசன் போட்ட பதிவில், மழை தேங்கின்ற பகுதிகளில் தற்போது சரி செய்யப்பட்டு இருப்பதாகவும், இதற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆபரின் செய்தி குறிப்பில், இன்றை தினம் செல்லூர் பகுதி வட்டங்களில் புகுந்த வெள்ள நீரை வடிய வைக்க மாநகராட்சி நிர்வாகமும், மாமன்ற உறுப்பினர்களும் பகல் முழுவதும் கடுமையாக பணியாற்றியுள்ளனர். அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

23 ஆவது வட்டத்தின் #CPIM மாமன்ற உறுப்பினர் தோழர் குமரவேல் தனது வட்டத்திற்கு உட்பட்ட தாகூர் நகர் பகுதியில் புகுந்த வெள்ள நீர் முற்றிலும் வடிந்த பின்னர் இப்பொழுது தான் வீடு திரும்பி மனநிறைவோடு தொலைபேசியில் அழைத்து செய்தியைப் பகிர்ந்தார் அவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Rains Flood Sellur CPIM MP DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->