மகாராஷ்டிரா தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை நசுக்கிய பாஜக கூட்டணி கட்சிகள்! முதல் இடத்தில் பாஜக!
Maharashtra Assembly Elections 2024 SarathPawar Sivasena BJP Congress
மகாராஷ்டிரா தேர்தலில் பிளவுபட்ட சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் பிளவுபட்ட என்.சி.பியில் அஜித் பவார் அணி முன்னிலை பெற்று வருகிறது.
பிளவுபட்ட சிவசேனாவில், பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே சிவசேனா 21 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இதேபோல், பிளவுபட்ட என்.சி.பியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி, து 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட சரத் பவார் தலைமையிலான என்.சி.பி, 14 இடங்களில் முன்னிலை மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக 123 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.
மொத்தமாக பார்த்தால் பாஜக கூட்டணி 219 இடங்களிலும், இண்டி கூட்டணி 57 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
ஆட்சியை பிடிக்க 144 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
English Summary
Maharashtra Assembly Elections 2024 SarathPawar Sivasena BJP Congress