மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் : முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 38 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை   தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும்  தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 38 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, பவார் குடும்பத்தின் கோட்டை பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித் பவார் மீண்டும் களம் காண்கிறார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த மாணிக்கராவ் கவித்தின் மகன் பாரத் கவித் நவாபூர் தொகுதியில் போட்டியிடுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra assembly elections the national congress released the list of candidates for the first phase


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->