மகாராஷ்டிரா தேர்தல் முடிவு இந்தியாவின் அரசியலை மாற்றும்!...மத்தியில் பாஜக கவிழும்!...பாஜக மீது அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும்  தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சித்தலைவரும், உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மகாராஷ்டிரா மாநிலம், துலேவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துலே தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் இர்ஷாத் ஜஹாகிர்தாரை அறிவித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் அரசியலை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையும் மாற்றும் என்று கூறினார். மேலும், இது ஒரு வரலாற்றுத்தேர்தல் என்று கூறிய அவர், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநிலத்தில் பாஜக அரசு வீட்டுக்கு செல்லும் சமயத்தில் மத்தியிலும் பாஜக கூட்டணி அரசு கவிழும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra election result will change the politics of india bjp will fall in the middle akhilesh yadav hits hard on bjp


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->