ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியாக மத்திய அரசுக்கு ரூ.31, மாநில அரசுக்கு ரூ.32 - உண்மையை போட்டுடைத்த முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, "பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். 

இதற்க்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அளித்துள்ள பதிலில், 

"மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில் மத்திய அரசுக்கு 24.38 ரூபாயும், மாநில அரசுக்கு 22.37 ரூபாயும் வாட் வரியாக உள்ளது. 

பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு 31.58 ரூபாயும், மாநில அரசுக்கு வரியாக 32.55 ரூபாயும் உள்ளது. 

எனவே மாநில அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று கூறுவதில் உண்மையல்ல" என்று பலதிலளித்துள்ளார்.

இதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அளித்துள்ள பதிலில், "முற்றிலும் ஒருதலைப்பட்சமாக பிரதமர் மோடி தவறான அறிவுறுத்தலை தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு ரூபாய் மானியமாக கடந்த 3 ஆண்டுகளாக வழங்குகிறோம்.

மாநிலங்களை நீங்கள் அவமானப்படுத்துவது உங்களின் கேவலமான செயல்திட்டம். மக்களின் சுமையை குறைக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது? ஜனநாயகத்தை குப்பையில் போடாதீர்கள். எங்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று பதிலளித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

maharastra cm say about petrol tax


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->