''ஊழல் மற்றும் தோல்வியை மறைக்க ஸ்டாலின் அபத்தமாக பேசுகிறார். இது சரியல்ல..'' மத்திய அமைச்சர் விமர்சிப்பு ..!
Stalin is talking nonsense to hide corruption and defeat Union Minister Criticism
''தொகுதி மறுவரையறை விவகாரத்தில், மத்திய அரசை ஸ்டாலின் எதிர்க்கிறார். அவருடைய எதிர்ப்பு தவறானது'' என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று அளித்த பேட்தீயில் கூறியுள்ளதாவது; ''தொகுதி மறுவரையறை விவகாரத்தில், மத்திய அரசை ஸ்டாலின் எதிர்க்கிறார். அவருடைய எதிர்ப்பு தவறானது. தன் ஆட்சியில் நடக்கும் ஊழல் மற்றும் தோல்வியை மறைக்கவே, இதை ஊதிப் பெரிதாக்குகிறார்.'' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் ''தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதற்காக ஸ்டாலின் அமைக்கவிருக்கும் கூட்டு நடவடிக்கை குழு தேவையற்றது.'' எனவும் அவர் பேசியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் அவர் மேலும் பேசுகையில்; ''தொகுதி மறுவரையறை தொடர்பாக, இதுவரை எந்த விதிமுறைகளும் இல்லாதபோது, ஸ்டாலின் அமைக்கவிருக்கும் கூட்டு நடவடிக்கை குழு என்ன செய்யும்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், ''எல்லோரும் அச்சப்படுவது போல, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டார். அதையும் தமிழகம் வந்தபோதுதான் தெரிவித்துள்ளார். அதன்பின்பும், தொகுதி மறுவரையறை விஷயத்தில் ஸ்டாலின் அபத்தமாக பேசி வருகிறார். இது சரியல்ல,'' என்று அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டமாக கூறியுள்ளார்.
English Summary
Stalin is talking nonsense to hide corruption and defeat Union Minister Criticism