மலேசிய நாட்டு பெண் எம்எல்ஏ.,வுக்கு ஆபாச குறுஞ்செய்தி., ஆளுநர் தமிழிசையிடம் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் மூலமாக ஆபாச தொல்லை தரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மலேசிய சட்டமன்ற பெண் உறுப்பினர் ஒருவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இடம் புகார் அளித்துள்ளார்.

மலேசிய நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள, மலேசியா வாழ் தமிழரான 'தமிழச்சி காமாட்சி' என்பவர் சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதில், முகநூல் மூலமாக புதுச்சேரியை சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். 

நாளடைவில் வெற்றிவேல் பிரகாஷ் முகநூல் மெசேஞ்சர் மூலமாக ஆபாச குறுஞ்செய்தியை 'தமிழச்சி காமாட்சி'க்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில், வெற்றிவேல் பிரகாஷ் முகநூல் மெசேஞ்சர் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது குறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இடம், தமிழச்சி காமாட்சி புகார் அளித்துள்ளார்.

அவரின் அந்த புகாரில் வெற்றிவேல் பிரகாஷ் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malaysia MLA complaint To Puducherry Governor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->