திவேதியா.. சதுர்வேதியா..? மாநிலங்களவையில் சிரிப்பலை.. கார்கே குழப்பம் ..!! - Seithipunal
Seithipunal



நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பேசினர். அந்த வகையில் மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

அப்போது அவர் தனக்கு கால் வலி இருப்பதால் தன்னால் நின்று கொண்டு பேச முடியாது என்று கூறி அமர்ந்து கொண்டு பேச அனுமதிக்குமாறு மாநிலங்களவை சபாநாயகரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் அனுமதி கோரினார்.

இதற்கு அனுமதியளித்த ஜெகதீப் தன்கர், " இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவி உள்ளேன்" என்று சிரித்துக் கொண்டே கூறியதையடுத்து கார்கேவும், "ஆம்.. நீங்கள் சில சமயங்களில் மட்டும் எங்களுக்கு உதவுகிறீர்கள்" என்று பதிலுக்கு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய கார்கே, எம். பி. சுதான்சு சதுர்வேதி பெயரைக் குறிப்பிடும்போது, "திவேதியா, சதுர்வேதியா, திரிவேதியா ? நான் தெற்கைக் சேர்ந்தவன் என்பதால் இந்த பெயர்கள் எப்போதும் எனக்கு குழப்பம் தான்" என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அவை முழுவதும் சிரிப்பலையால் நிரம்பி உள்ளது. தொடர்ந்து சபாநாயகர் ஜெகதீப் தன்கர் "இந்த பெயர்கள் குறித்து நீங்கள் விரும்பினால் ஒரு அரை மணி நேரம் நாம் விவாதிக்கலாம்" என்று பதிலுக்கு நகைச்சுவையாக பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தான் பேசும்போது சபாநாயகர் தன்கர் தனது மைக்கை அணைத்து விடுகிறார் என்று கார்கே குற்றம் சாட்டி வந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் நடந்த இந்த சம்பவம் இவர்கள் இருவருக்கு இடையேயான இறுக்கத்தை சிறிது தளர்த்தியுள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge Confused About Names Divedi, Chaturvedi in Rajya Sabha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->