அடுத்த அதிரடி.. இண்டி கூட்டணி தலைவராக "மல்லிகார்ஜூன கார்கே" தேர்வு.!! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியாகூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் புது டில்லியில் நடைபெற்ற நிலையில் 
இன்று கூட்டணி கட்சித் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை துவக்குவது குறித்துஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இண்டி கூட்டணியின் தலைவராக பீஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ்குமார் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் அவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு அந்த பதவியை வழங்கலாம் அவர் பரிந்துரைத்ததாகவும் தெரிகிறது.இதனை அடுத்து இண்டி கூட்டணியின் தலைவராக  மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. மம்தா மற்றும் அகிலேஷ் யாதவுடன் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge elected indi alliance leader


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->