எத்தனை மோடி,  அமித்ஷா வந்தாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் ஆட்சி தான் - மல்லிகார்ஜுனா கார்கே.! - Seithipunal
Seithipunal


எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நாகலாந்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

இந்தியாவை காக்கும் ஒரே மனிதர் நான்தான் என்றும், வேறு யாரும் தன்னை தொட முடியாது என்று மோடி கூறி வருவதை குறிப்பிட்டு எந்த ஜனநாயக மனிதனும் இதை கூறிக் கொள்வதில்லை என அவர் கூறியுள்ளார்.

 

மேலும், எத்தனை மோடி, எத்தனை அமித்ஷா வந்தாலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும், நமது நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களது உயிரை கொடுத்தனர். ஆனால் பாஜகவினர் 2014ல் தான் சுதந்திரம் பெற்றதாக நினைப்பதாக விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna kharge speech 2024 parliament election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->