#Breaking || பிப்.13ல் சென்னை வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்க மதிக்கும் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்தான முதற்கட்ட பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 21 தொகுதிகள் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளை திமுக தரப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை சந்திக்கும் மல்லிகை அர்ஜுன கார்கே தொகுதி பங்கீடு உடன்பாடு குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இத பேச்சு வார்த்தையின் முடிவில் தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna kharge visit tamilnadu on feb13


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->