மோடியை விவாதத்திற்கு ஆழைத்த மல்லிகார்ஜுன கார்கே!!
Mallikarjuna Kharge who brought Modi into debate
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
பிரதமர் மோடியின் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை பார்த்தேன். அது மோடி மிகவிரத்தியிலும் கவலையிலும் இருப்பதை வெளிகாட்டுகிறது. நீங்கள் கூறிய பொய்களால் எந்த பயனும் கிடைக்காததால் அவதூறு பரப்பும் பாஜக வேட்பாளர்களுக்கு அறிவுருத்துவது போல் தெரிகிறது. ஒரு பொய்யை ஆயிரம் முறை கூறினால் அது உண்மையாகி விடாது.
மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை காங்கிரஸ் அரசு பறித்து விட்டதாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அரசியல் சட்டத்திற்கு எதிராக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,250 கோடி சுருட்டியது பாஜக தான்.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இட ஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜககும் பல்வேறு கோணங்கில் எதிர்த்து வருகின்றது.
சமத்துவயின்மை, வேலையில்லா திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான பாஜக தலைவர்களின் அராஜகங்களை பற்றி நீங்களும் அல்லது நீங்கள் நியமிக்கும் நபரோ எங்களுடன் விவாதிக்க தயாரா? என்று அக்கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Mallikarjuna Kharge who brought Modi into debate