காங்., சி.பி.எம் பாஜகவின் ஏஜெண்டுகள்.. - மம்தா பானர்ஜி தாக்கு.!!
Mamata Banerjee alleged Congress CPM are BJP agents
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்திய கூட்டணி பாஜகவை வீழ்த்தும் உழைப்பின் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி ஆவார்.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து வந்தாலும் மேற்கு வங்கத்தில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார் மம்தா பானர்ஜி.
பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஒன்றிணைந்த கூட்டணியில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார். அதே வேலையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட போவதில்லை எனவும் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இதனால் இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. மாநில அளவில் இரு கட்சிகளையும் எதிர்த்தாலும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் கொள்கை ரீதியில் விமர்சனம் செய்வதற்கு பதிலாக பாஜகவின் ஏஜென்ட்கள் என பிரச்சாரம் செய்து வருகிறார் மம்தா பானர்ஜி.
அவர் மேற்கொண்டு வரும் பரப்புரைகளில் எதிர்காலத்தில் இந்தியா கூட்டணிக்கு நாம் தலைமை தாங்குவோம். மேற்கு வங்கத்தை கொடுத்த வரை காங்கிரஸ் சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பாஜகவின் ஏஜென்ட்களாக செயல்பட்டு வருகின்றன என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதிகாரம் செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என கணக்கு போடுகிறார் மம்தா பானர்ஜி.
English Summary
Mamata Banerjee alleged Congress CPM are BJP agents