நாடாளுமன்றத் தேர்தல்.. புதிய கூட்டணி.? மம்தா பானர்ஜி - நிதிஷ்குமார் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பது குறித்து மற்றும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு மேற்குவங்க மாநில செயலகம் நபன்னா வளாகத்தில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்றது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamtha Banerjee meet nithish Kumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->