ஆா்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவா்கள் இல்லை - மம்தா பானர்ஜி.!
Mamtha Banerjee speech about RSS
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
ஆா்எஸ்எஸ் அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவா்கள் இல்லை' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல் மந்திரியுமான மம்தா பானா்ஜி கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜகவின் அரசியலை விரும்பாதவர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, அந்த அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்று தலைமைசெயலகத்தில் நடைபெற்ற விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.
மம்தாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ஆா்எஸ்எஸ் அமைப்பை மம்தா பானர்ஜி பாராட்டுவது இது முதல் முறையல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மம்தா பானர்ஜி அங்கம் வகித்துள்ளார். வாக்குகளைப் பெற சில நேரம் இந்து அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும் சில நேரம் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் மம்தா பானர்ஜி பேசுவார் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியும் மம்தாவின் பேச்சை விமர்சித்துள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு பதில்ளித்துள்ள பாஜக, யாருடைய சான்றிதழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தேவையில்லை என்றார். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸை மம்தா பானர்ஜி பாரட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mamtha Banerjee speech about RSS