பதிலுக்கு பதில்.. பேச்சுக்கு பேச்சு.. திமுக - காங்கிரஸ் விரிசல்...!!
manik thakur say answer about duraimurugan speech
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொருளாளரான துரைமுருகன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு "திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும். எங்களுக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை.

எங்களுடைய ஓட்டு வங்கியை அது பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது. கூட்டணியை விட்டு போனால் பிரச்சனை இல்லை. காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம் பதில் சொல்லும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்து இருக்கின்றார். பதிலையே கூறிவிட்டேன்." என்று தெரிவித்தார்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் பேச்சு காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி பிரச்சனையை உண்டாக்கியது. இந்த நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து துரைமுருகன் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஸ்டாலின் முதல்வராக கூடாது என்ற எண்ணத்தில் உள்கட்சியிலேயே பலர் இருந்து வருகின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மாணிக் தாகூர் கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
manik thakur say answer about duraimurugan speech