இப்தார் விருந்தில் மன்மோகன் சிங்- தலைமை நீதிபதி!...காங்கிரசுக்கு பாஜக சரமாரி கேள்வி!
Manmohan Singh Chief Justice at Iftar party BJP barrage of questions to Congress
நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சாத்திரத்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அவர்களின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டு பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜை செய்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியது. தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது.
இதற்கிடையே கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். அப்போது மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இந்த இப்தார் விருந்தில் பிரதமரும் தலைமை நீதிபதியும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனாவாலா, இப்தார் விருந்தில் பிரதமரும் தலைமை நீதிபதியும் பேசும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'நீதித்துறை பத்திரமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது நினைத்தது என்றும், இப்போது சமரசம் செய்துகொண்டதாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Manmohan Singh Chief Justice at Iftar party BJP barrage of questions to Congress