மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட டு வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்   மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுப்பையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 39 நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது அதில் முதல் வெற்றியாக  தூத்துக்குடி நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட  கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marxist candidate S Venkatesan wins in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->