"பம்பரம் சின்னம்" ஒதுக்க கோரி மதிமுக சார்பில் அவசர வழக்கு.!! - Seithipunal
Seithipunal


மதிமுகவிற்கு ‘பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.

நடம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளின் சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இத்தகைய சூழலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் மதிமுகவுக்கு பம்பர் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த நிலையில் அதன் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனவே கடந்த தேர்தல்களில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பம்பர சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி ஜி.கே வாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை முடிவில் தேர்தலுக்கு முன்பு முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK case filed against eci for party symbol


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->