தீர்த்த நீராடிய அமைச்சர் அன்பில் மகேஷ்.! ராமேஸ்வரத்தில் மகாளயபட்ச வழிபாடு.! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசாமி திருக்கோவிலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புனித தீர்த்தமாடி சாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட் மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இத்தகைய நிலையில், பள்ளியில் கழிவறை, குடிநீர் மற்றும் சமையலறை ஆகிய மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதனை தொடர்ந்து, ராமேஸ்வரத்திற்கு வந்த அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுகளை மேற்கொண்டார். முன்னதாக, (செப்டம்பர் 21) மஹாளய பட்சத்தை முன்னிட்டு இன்று காலையில் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தனுஷ்கோடிக்குச் சென்ற அன்பில் மகேஷ், முன்னோர்களுக்கு திதி கொடுத்தார். 

அதன் பின், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இருக்கின்ற 21 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினார். தொடர்ந்து, ராமநாதசாமி ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளை அவர் தரிசனம் செய்துவிட்டு அதன் பின் பள்ளிக்கு சென்று ஆய்வுகளை மெற்கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister anbil mahesh poyyamozhi in Rameswaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->