300 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும்.. முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!  - Seithipunal
Seithipunal


அரசு காலிப்பனியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் 300 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். 

புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறையில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள இளநிலை பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர் இணைப்பு, கணக்கீடு, வரி & கட்டண வசூல் இணையதள சேவை தொடக்க விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
 
விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் ,  முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். மேலும், ஒருங்கிணைந்த குடிநீர் இணைப்பு, கணக்கீடு, வரி & கட்டண வசூல் இணையதள சேவையைத் தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் பேசிய  முதலமைச்சர் ரங்கசாமி அரசுத்துறையில் உள்ள அனைத்து அரசு காலிப்பனியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் 300 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு என தெரிவித்தார். 

முன்னதாக  அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட  முதலமைச்சர் ரங்கசாமி பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொகுப்பிற்கு பதிலாக ரூ.750 பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

300 Nurse posts to be filled soon Chief Minister Rangasamy confirmed 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->