தமிழகத்திலும் தேசிய கல்வி கொள்கையா?! நிதியால் நெருக்கடி தரும் மத்திய அரசு - அமைச்சர் அதிர்ச்சி பேட்டி! - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் கல்வி திட்டத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதியை விடுவிப்பதற்கு பதில், தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாவது, 

"மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜுன் மாதம் வரவேண்டிய ரூ.573 கோடி பணம் இன்னும் வரவில்லை. கல்வி என்று வரும் போது 60 : 40 அளவில் வரவேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்திவிடக்கூடாது.

இது பல லட்சம் பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயம், இதில் அரசியல் செய்யக்கூடாது என வலியுறுத்தினோம். 

ரூ.573 கோடி மட்டுமல்ல, கடந்தாண்டுகடைசி தவணையான ரூ.249 கோடியையும் மத்திய அரசு நிறுத்திவிட்டது. தேசிய கல்விக் கொள்கைக்குள் (NEP) வந்தால் மட்டுமே தருவேன் என மத்திய அரசு சொல்கிறது.

NEP திட்டம் 2020ல் தான் வந்தது, ஆனால் ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ (SSA) 2018ல் இருந்தே இருக்கிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி, உண்டு உறைவிடப் பள்ளிக்கான நிதி, மலைப்பிரதேச மாணவர்களை அழைத்து வருவதற்கான நிதி உள்ளிட்ட நிதிகளை ஏதேதோ காரணங்கள் சொல்லி, NEP-க்குள் வந்தால் தான் தருவேன் என சொல்வது நியாயம் இல்லை”

மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. ஆசிரியர்கள் சம்பளம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Anbil Mahesh say about new National Education Policy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->