#BigBreaking || தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட சற்றுமுன் பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருப்பதாகவும், புதிய அணை தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ள நிலையில், கேரள சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்கியது. 

இந்த கூட்டத்தொடரை தொடக்கி வைத்துப் பேசிய அம்மாநில ஆளுனர் முகமது ஆரிப் கான், முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதால், அதற்கு மாற்றாக புதிய அணையைக் கட்டுவதில் கேரள அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். 

மேலும், இது குறித்து தமிழ்நாட்டு அரசுடன் விரைவில்  பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்து இருப்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தான் தமிழக அரசின் முதல் இலக்காக இருக்க வேண்டும். 

அதற்கு கேரளத்தின் தரப்பில் போடப்படும் முட்டுக்கட்டைகளை தகர்த்து, பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்ற அனுமதியை பெற வேண்டும். 

அதன்பின் பேபி அணையை வலுப்படுத்தும் பணியை நிறைவு  செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சற்றுமுன்பு விடுத்துள்ள அறிக்கையில், கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்கமுடியாது என்றும், தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரள அரசின் புதிய அணை திட்டம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Duraimurugan Say About Kerala Governor Speech


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->