ஆன்மீகமும்; திராவிடமும் ஒன்றுதான்..!! வேலூரில் விளக்கம் அளித்த அமைச்சர் ஏ.வ வேலு..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தை அடுத்த அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் சந்தைப்பேட்டில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு கலந்து கொண்டார். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ வேலு "திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். ஆன்மீகமும் திராவிடமும் ஒன்றுதான். அவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பிறந்த வளர்ந்த நான் ஆன்மீகத்திற்கு எதிராக எப்பொழுதும் பேச மாட்டேன்" என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் முடக்கியதாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் அதிமுக ஆட்சியில் தான் முடக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும் முடக்கப்படவில்லை. அவ்வாறு எந்த திட்டம் முடக்கப்பட்டது என சொன்னால் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வளர்ச்சி பெற்ற மாநிலங்களை விட தமிழகம் தற்பொழுது முதல் இடத்தில் உள்ளது" என அமைச்சர் ஏ.வ வேலு பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister EV Velu explained Spirituality and Dravidiam are one


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->